வேலணை மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்றுப் பொருளாதார வசதியின்மையால் தமது பட்டப்படிப்பைத் தொடரமுடியாமல் அல்லலுறும்
39 மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மாணவர் ஒருவருக்கு தலா
3000.00 ரூபா (இலங்கை ரூபா) வீதம்; மாதாமாதம்
117,000.00 ரூபா நிதியுதவியை தற்பொழுது வழங்கி வருகின்றோம் என்பதைச் சங்கத்தின் சார்பில் அறியத் தருகின்றோம்.
யாழ் பல்கலைகழகம் - 29 மாணவர்கள்
கிழக்குப் பல்கலைகழகம் - 09 மாணவர்கள்
பேராதனைப் பல்கலைகழகம்- 01 மாணவர்
யூன்-2011 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த நிதி உதவித் திட்டம் வெற்றிகரமாகத் தனது முதலாண்டைப் பூர்த்திசெய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
காலத்தின் கட்டாயமான இச்சீரிய பணியினைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்குச் சங்கத்தின் அங்கத்தவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் புலம்பெயர் மண்ணின் வர்த்தகப் பெருமக்கள் அனைவரும் தமது முழுமையான ஆதரவையும் தம்மால் இயன்ற பங்களிப்பையும் நல்குமாறு சங்கத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதோடு இத்திட்டம் வெற்றியடைய உதவிய நன்கொடையாளர்களுக்கும் குறிப்பாகப் பத்திரிகையாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
என்ற புரட்சிக்கவிஞன் பாரதியின் கனவினை நனவாக்கப் பாடுபடுவோம்.
|