எமது சகோதர சங்கங்களுடன் தொடர்பைப் பேணுவதிலும் எங்கள் சங்கத்தின் தற்போதய செயற்திட்டங்கள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இது போன்ற தொடர்பாடல்களால் எதிர்காலத்தில் ஒரு திட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்கள் நிதி உதவி அளிப்பதைத் தவிர்த்து வெவ்வேறு திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவான சூழல் உருவாகும் என நம்புகின்றோம்.
எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரையில் கல்லூரியின் பௌதீக கட்டுமானங்களுக்கான (கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களுக்கான) உதவிகளை இயன்றவரை தவிர்த்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்பதையும் சங்கத்தின் சார்பில்
அறியத்தருகின்றோம்.
மேலும் இச்சங்கம் எந்தவொரு அமைப்பின் கிளையோ அல்லது இதற்கு எந்தவித கிளை அமைப்புக்களோ இல்லாத (கனடாவின் ஒன்ராரியோ மாகாண சட்டவிதிகளுக்கமைய பதிவு செய்யப்பட்டுக் கனடாவில் இயங்கும்) இலாப நோக்கற்ற சுயாதீன அமைப்பாகும்.
ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும்.
நிர்வாகசபை
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா |