Projects                                                                     

Ongoing Projects
 University Students Scholarship Project
 School Students Scholarship Project
 Remedial Tutoring Project
 Computer Lab Enhancement Project
 Teachers Appreciation Project
Completed Projects
 Overhead Projectors Donation in 2017
 Laptops donation in 2017
 Excercise Books Donation for School
 Photocopier & Printer Donation
 Help to Basketball Competition
 Cupboard Donation
 Donation for Tamil Day Competition
 Nutritious Lunch Project
 Anantharajah Fund




Application Forms
Appreciations
 University Students Scholarship Application Form  From a Sister Association
 School Students Scholarship Application Form  From a Student
 Remedial Tutoring Payment Voucher  From Old Students
பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவித் திட்டம்
வேலணை மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்றுப் பொருளாதார வசதியின்மையால் தமது பட்டப்படிப்பைத் தொடரமுடியாமல் அல்லலுறும் 14 மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மாணவர் ஒருவருக்கு தலா 3000.00 ரூபா (இலங்கை ரூபா) வீதம் மாதாமாதம் 42, 000.00 ரூபா நிதியுதவியை தற்பொழுது வழங்கி வருகின்றோம் என்பதைச் சங்கத்தின் சார்பில் அறியத் தருகின்றோம்.

யாழ் பல்கலைக்கழகம் (யாழ் வளாகம்) - 07 மாணவர்கள்
கிழக்குப் பல்கலைக்கழகம் - 06 மாணவர்கள்
சபரகமுவ பல்கலைக்கழகம் - 01 மாணவர்

யூன்-2011 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த நிதி உதவித் திட்டம் வெற்றிகரமாகத் தனது ஆறாவதாண்டைப் பூர்த்திசெய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. டிசெம்பர் 2017 வரை, இத்திட்டத்திற்காக மொத்தம் 59, 755.00 டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளது.


உயர்தர வகுப்பு விஞ்ஞானப்பிரிவு மாணவர்களுக்கான நிதியுதவித் திட்டம்

எமது கல்லூரியில் க.பொ.த சாதாரணம் கற்று நல்ல பெறுபேற்றைப்பெற்றவர்களும், ஓரளவு வசதி படைத்தவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று விடுவது காலங்காலமாக நடைமுறையிலுள்ள நிகழ்வாகும். இதன்காரணமாக எமது கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவு நலிவடைந்து மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளமையினால் வறிய மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

மாணவர்களை எமது கல்லூரியில் கற்க வைப்பதற்கும், உண்மையிலேயே வறிய மாணவர்களுக்கு உதவுமுகமாகவும் எமது கல்லூரியின் தரத்தை மேம்படுத்தி விஞ்ஞானப்பிரிவினை வலுப்படுத்துதல் அவசியமாகும். இது எமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயமாகும். இருந்தபோதும் இப்பெரும் கைங்கரியத்தினை நிறைவேற்றும் ஓர் பரீட்சார்த்த முயற்சியாகத் தற்போது விஞ்ஞானப்பிரிவில் கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக (யாழ்ப்பாணம் சென்று ரியூசன் கற்றலுக்கான) நிதியுதவி வழங்குவது அவசியமெனக்கருதி அதற்கான நிதியுதவித் திட்டம் ஒன்றை ஒக்ரோபர் 2012 முதல் செயற்படுத்தி வருகின்றோம்.

இத்திட்டத்தின் மூலம் தற்போது 4 க.பொ.த உயர்தர விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் பயன்பெறுகின்றார்கள். மாணவர் ஒருவருக்கு மாதம் 2000.00 ரூபா வீதம்; மாதாமாதம் 8,000.00 ரூபா நிதியுதவியை வழங்கி வருகின்றோம் என்பதைச் சங்கத்தின் சார்பில் அறியத்தருகின்றோம். டிசெம்பர் 2017 வரை, இத்திட்டத்திற்காக மொத்தம் 6, 890.00 டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளது.

தரம் 6, 7, 8, 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பரிகார கற்பித்தல் செயற்திட்டம்


பொதுவாக தீவுப்பகுதியில் குடித்தொகை ஐதாக்கத்தின் காரணமாக மாணவர் எண்ணிக்கை குறைவாகும். எனவே எமது கல்லூரியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. இவ்வாறு அனுமதி பெறும் மாணவர்களில் 25 வீதமான மாணவர்கள் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றார்கள். இச்சதவீதமான மாணவர்களது எழுத்தறிவு மற்றும் கணித அறிவினை மேம்படுத்துவது வழமையான கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் மூலம் அசாத்தியமானதாகும்.

இவ்வாறான மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் தொடர்ச்சியாக காணப்படுகின்றார்கள். 2013ம் ஆண்டிற்கான முதலாம் தவணைப்பரீட்சைப் புள்ளிகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் பரிகாரக்கற்பித்தல் செயற்றிட்டத்தில் உள்வாங்கப்படும் மாணவர் விபரம் சேகரிக்கப்பட்டு முதற்கட்டமாக தரம்6, தரம்7, தரம்8, தரம்9, தரம்10, தரம்11 மாணவர்களுக்கு தமிழ், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு பரிகார கற்றல் செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டு ஏப்ரல் 27, 2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு மாதம் ஒன்றிற்கு சராசரியாக 25, 000.00 ரூபாக்கள் வீதம் மாதாமாதம் வழங்கிவருகின்றோம். டிசெம்பர் 2017 வரை இத்திட்டத்திற்காக 12,172.00 டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி போற்றல் செயற்றிட்டம்


எமது கல்லூரியில் ஆசிரியப்பணியாற்றுவதற்குப் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பலவித இன்னல்களுக்கு மத்தியில் ஆசிரியர்கள் வருகைதருகின்றார்கள். அவ்வாறு வருகைதரும் ஆசிரியர்களை வினைத்திறனுடன் சேவையாற்ற வைப்பதற்கும் அவர்கள் தீவக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதற்கும் ஆசிரியர் பணி போற்றல் செயற்றிட்டம் உந்துசக்தியாக அமையும் என்ற நம்பிக்கையில் தன்னலங் கருதாது பணிபுரியும் ஆசிரியர்களைக் கீழ்க்காணும் வழிமுறைகளுக்கமையத் தெரிவு செய்து

1) மாணவர்களின் கல்விப்பெறுபேறுகள்
2) மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்சாதனைகள்
3) மாணவர்களின் ஒழுக்க விழுமிய மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புக்கள்

அவர்களைக் கௌரவித்துப் பரிசில்கள் வழங்கும் சீரிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கடந்த பொதுச்சபைக்கூட்டப் பரிந்துரைக்கிணங்க 26-09-2016 இல் நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் இத்திட்டத்தின் சாதக பாதகங்கள் பற்றி உறுப்பினர்கள் நீண்ட கலந்துரையாடல் நடாத்தி நன்கு பரிசீலித்து இந்த வருடப் பரிசளிப்பு விழாவில் இத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதென்று தீர்மானித்ததுபோல் இச்சீரிய செயற்திட்டத்தைத் திட்டமிட்டவாறு 01-11-2016 அன்று வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்துள்ளோம்.

மேற்கூறிய வழிமுறைகளை அடிப்படையாகக்கொண்டு மாணவர்கள் மற்றும் பகுதித்தலைவர்கள் ஆகியோரின் சிபாரிசுகளை முதன்மைப்படுத்தி பாடசாலை மட்ட ஆசிரியர் செயற்பாட்டுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கல்லூரி அதிபர் கனடாப் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஆகியோரால் இறுதித் தெரிவு நடைபெற்று 5 ஆசிரியர்களுக்குக் குரு கருணை ஒளி விருது வழங்குவதென்று தீர்மானிக்கப்பட்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் 10,000.00 ரூபா ரொக்கப்பணமும் பாராட்டுக்கேடயமும் 01-11-2016 அன்று நடைபெற்ற எமது கல்லூரித்தினப் பரிசளிப்பு விழாவில் வழங்கிக் கௌரவித்துள்ளோம். இதற்காக எமது சங்கத்தால் வழங்கப்பட்ட நிதியுதவி 619.00 டொலர்கள் ஆகும்.

மேற்குறிப்பிட்ட நான்கு நீண்டகாலத் திட்டங்களுக்குமாக மொத்தம் 79,436.00 டொலர்கள் இதுவரை செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செயற்திட்ட அறிக்கை (மார்ச் 06, 2011 - டிசெம்பர் 07, 2017)
பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித் திட்டம்   $59, 755.00 
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான உதவித் திட்டம்   $6, 890.00 
6 - 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பரிகார கற்பித்தல் செயற்திட்டம்   $12, 172.00 
ஆசிரியர் பணி போற்றல் செயற்திட்டம்   $619.00 
கல்லூரிக்கு Overhead Projectors அன்பளிப்புக்கான செலவு   $1, 565.00 
அதிபர் பிரதிஅதிபர்களுக்கு Laptops அன்பளிப்புக்கான செலவு   $1, 090.45 
உயர்தர வகுப்பு மாணவர்கள் பயிற்சிப் புத்தகங்களுக்கான நிதியுதவி   $90.00 
கல்லூரிக்கு Photo Copier & Printer அன்பளிப்புக்கான செலவு   $1, 778.00 
பல்கலைக்கழக மாணவர் கூடைப்பந்தாட்ட நிதியுதவி   $232.00 
2012ம் ஆண்டு தமிழ்த்தினப் போட்டிக்கான நிதியுதவி   $317.00 
2011ம் ஆண்டு அலுமாரிகள் வாங்குவதற்கான நிதியுதவி   $1, 221.00 
     
மார்ச் 06 2011 இலிருந்து டிசெம்பர் 07 2017 வரை மொத்தமாக 85, 729.45 டொலர்கள்.
மேற்கூறப்பட்டுள்ள 11 அர்த்தமுள்ள உதவித்திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.






கனிவான வேண்டுகோள்

காலத்தின் கட்டாயமான இச்சீரிய பணியினைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்குச் சங்கத்தின் அங்கத்தவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் புலம்பெயர் மண்ணின் வர்த்தகப் பெருமக்கள் அனைவரும் தமது முழுமையான ஆதரவையும் தம்மால் இயன்ற பங்களிப்பையும் நல்குமாறு சங்கத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதோடு இத்திட்டங்கள் வெற்றியடைய உதவிய நன்கொடையாளர்களுக்கும் குறிப்பாகப் பத்திரிகையாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!




பெரிய காரியங்களைச் செய்வதற்கு ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம் ஆகிய மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும்.
-சுவாமி விவேகானந்தர்


Home    |    Membership    |    Photo Gallery    |    Committee    |    About Us    |    Contact Us
2009 © VCCOSA Canada